
மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம்
செய்தி முன்னோட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின், லாகின் மற்றும் பயண விபரங்களை கேட்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு, நாடாளுமன்ற நெறிமுறை குழு கடிதம் எழுதியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்பி மொய்த்ரா பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க இவற்றை, மத்திய அமைச்சகங்களிடமிருந்து நாடாளுமன்ற நெறிமுறை குழு கோரியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்பி மஹுவா பணம் மற்றும் வெகுமதி பெற்றதாக,
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் அனந்த் ஆகியோர் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தனர்.
மேலும் மஹுவா பணம் வாங்கியது உண்மை என, பணம் வழங்கியதாக குற்றசாட்டப்பட்டுள்ள ஹிராநந்தனி குழுமத்தின் தர்ஷன் பிரமாணபத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
2nd card
மஹுவா லாகின் ஐடி வழங்கினார்- தர்ஷன்
தர்ஷன் தாக்கல் செய்திருந்த பிரமாணபத்திரத்தில், மஹுவா கேள்விகளை கேட்க, அவரின் நாடாளுமன்ற லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
மேலும் மஹுவா தூண்டுதலின் பேரிலேயே தான் இவ்வாறு செய்ததாகவும், இதன் மூலம் எதிர்க்கட்சிகளிடம் நற்பெயர் கிடைக்கும் என்றும், அதன் மூலம் ஆளும் மாநிலங்களும் தான்(தர்ஷன்) லாபம் அடையலாம் என அவர் கூறியதாக அதில் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் எம்பி மஹுவா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னர் மஹுவாவிடம் விசாரணை நடத்திய நாடாளுமன்ற நெறிமுறை குழு, இதற்குப் பின் எந்த சாட்சியையும் அழைக்கப்படமாட்டாது என்றும், இது குறித்த அறிக்கை நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தது.