
NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
செய்தி முன்னோட்டம்
"ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்கிறார்கள்," என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், "NDA கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு கட்சி தலைவர் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கலாம். ஆனால் தற்போதைய திமுக ஆட்சி மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. அதனை அகற்ற எல்லா கட்சிகளும் ஒன்றாக வேண்டும். மக்கள் நலனுக்காக அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டமாக முடிவெடுக்க வேண்டிய தருணம் இது," என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
சென்னைக்கு வந்த அமித் ஷா என்னை அழைக்காதது வருத்தமளிக்கிறது என ஓ. பன்னீர் செல்வம் பேசியிருந்தார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்தார். #OPanneerselvam #NainarNagendran pic.twitter.com/emG3WORS9Q
— BBC News Tamil (@bbctamil) May 16, 2025
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ். வருத்தம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில்
அமித் ஷா சென்னை வந்தபோது ஓ.பி.எஸ்.-ஐ சந்திக்காமல் சென்றதை குறித்து அவர் வருத்தம் தெரிவித்து கூறியிருந்ததை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார், "அமித்ஷா வேறு விஷயமாக வந்திருந்தார். ஏற்கனவே OPS தே.ஜ. கூட்டணியில் இருக்கிறார். எனவே அவரைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் தற்போது தே.ஜ. கூட்டணியில்தான் உள்ளனர்," என்று கூறினார்.
2031 மற்றும் 2036-ம் ஆண்டுகளிலும் திமுக ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதைக் குறித்து கேட்டபோது, "யாரும் எந்த கருத்தையும் தெரிவிக்கலாம். ஆனால், இறுதி முடிவை எடுப்பது மக்கள் தான். இது எம்.ஜி.ஆர் காலத்தில் முதல் முறையாக வலியுறுத்தப்பட்ட உண்மை. மக்கள் தான் தீர்மானிப்பார்கள்," என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.