LOADING...
NIA திடீர் சோதனை: திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானலில் 10 இடங்களில் விசாரணை
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டது

NIA திடீர் சோதனை: திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானலில் 10 இடங்களில் விசாரணை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2025
11:57 am

செய்தி முன்னோட்டம்

திருவாரூரில் ஹிந்து முன்னணி தலைவர் ராமலிங்கம் கொலை வழக்கில் முக்கிய கைதியான முகமது அலி ஜின்னா தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று அதிகாலை 6 மணியிலிருந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டது. திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, பேகம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 இடங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனையில், முகமது அலி ஜின்னாவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்புடையவர்கள் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் காவல்துறை பாதுகாப்புடன், சோதனைகள் தொடரும் என கூறப்படுகிறது.

சோதனைகள்

NIA தீவிர சோதனை

சம்சுதீன் காலனியில் உள்ள முகமது யாசின் என்பவரது வீட்டில், முகமது அலி ஜின்னாவுடன் பண பரிவர்த்தனை தொடர்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியதை அடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வத்தலக்குண்டு காந்திநகர் விரிவாக்க பகுதியில், முகமது அலி ஜின்னாவின் மாமனார் உமர் கத்தாப் குடியிருக்கும் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கொடைக்கானலிலும் 5 இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு, பூம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்ட முகமது அலி ஜின்னா, தற்போது பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண பரிவர்த்தனை மற்றும் ஆதாரங்கள் தொடர்பான ஆதாயம் பெறும் நோக்கில், அவரது தொடர்புகளை விசாரணை செய்யும் வகையில் இந்த சோதனைகள் நடைபெற்றதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.