சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது
செய்தி முன்னோட்டம்
சென்னை மாநகரில் தற்போது 62.5 லட்சம் வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 6% அதிகரிக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டுவர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விபத்துகள் ஏற்பட முக்கிய காரணியாக இருப்பது அதிவேகம் என்பதால் வாகனங்களுக்கான புதிய வேக கட்டுப்பாடுகளை போக்குவரத்து காவல்துறை நிர்ணயம் செய்தது.
வேகம்
வாகனங்களின் வேகத்தை கண்டறியும் நவீன கருவி
இதற்காக 30 நவீன 'ஸ்பீடு ரேடார் கன்' வாங்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை, மதுரவாயல், அண்ணாசாலை, சென்ட்ரல், போன்ற இடங்களில் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் சென்னையில் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை அனைத்து வாகனங்களும் 40கிமீ.,வேகத்திலும், இரவு 10 மணிக்குமேல் 50கிமீ.,வேகத்திலும் செல்ல வேண்டும்.
இதனை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அரசு
கட்டுப்பாடுகளை நிர்ணயிக்க 6 பேர் கொண்ட குழு
ஆனால் இந்த கட்டுப்பாடு அசாத்தியமானது, நடைமுறைக்கு சரிவராது என்று பல விமர்சனங்கள் எழுந்ததாக தெரிகிறது.
இதனால் சென்னை பெருநகரின் கூடுதல் காவல் ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இந்த கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வினை நடத்தினர்.
டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் வாகங்களுக்கான வேக கட்டுப்பாடுகளோடு ஒப்பிட்டு பார்த்து இந்த ஆய்வானது நடந்தது.
அதன் முடிவில், தற்போது இக்குழு புதிய வேக கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்துள்ளது.
அபராதம்
குடியிருப்பு பகுதிகளில் செல்லும் வாகனங்கள் 30கிமீ.,வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது
இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, சென்னையில் மினிவேன், கார் போன்ற வாகனங்கள் மணிக்கு 60கிமீ.,வேகத்திலும்,
லாரி, ட்ரக் போன்ற கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மணிக்கு 50கிமீ.,வேகத்திலும்,
ஆட்டோக்கள் 40கிமீ.,வேகத்திலும் செல்லலாம்.
குடியிருப்பு பகுதிகளில் செல்லும் போது அனைத்து வாகனங்களும் 30கிமீ.,வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது.
ரூ.1,000
விதிகளை பின்பற்றினால் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
போக்குவரத்து விதிகள் முறையாக பொதுமக்களால் பின்பற்றப்படும் பட்சத்தில் பாதுகாப்பான பயணத்தினை அனைவரும் மேற்கொள்ளலாம்.
விபத்துகள் உள்ளிட்ட துயர் சம்பவங்கள் நேராமல் தடுக்கவும் இது அமையும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் பரீதாபாத்தில் உள்ள ஐ.ஆர்.டி.இ. என்னும் கல்வி நிறுவனம், சென்னையிலுள்ள ஐஐடி ஆகியவற்றின் பேராசிரியர்களின் அறிவுரைகளின் படியும் நிர்ணயம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.