Loading...
'பசங்கள் படிக்கும் நூலகப் புத்தகங்களில் கூட ஊழலா?': கல்வி விருது விழாவில் முதலமைச்சர் விஜய்
முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்

'பசங்கள் படிக்கும் நூலகப் புத்தகங்களில் கூட ஊழலா?': கல்வி விருது விழாவில் முதலமைச்சர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
06:25 pm

செய்தி முன்னோட்டம்

தவெக சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இரண்டாம் கட்டக் கல்வி விருது மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா, சென்னையில் உள்ள இன்று தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம் மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் விருதுகளையும் ஊக்கத்தொகையையும் வழங்கிச் சிறப்பித்தார்.

உரை

"ஊழலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளால் சிலருக்கு அச்சம்"

விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சிலர் இந்த மேடையை அரசியலாக்கப் பார்ப்பார்கள் என்பது குறித்துத் தமக்குக் கவலையில்லை என்றும், ஆனால் மாணவர்களின் எதிர்காலம் கருதி சில உண்மைகளைச் சொல்லியே ஆக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஊழல் என்பது பழமையான ஒன்றாக இருந்தாலும், மக்கள் அதனைப் பழகிக்கொண்டு கடந்து செல்லக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக தமது அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாகவே இன்று சிலரின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முறைகேடு

"பள்ளி நூலகப் புத்தகங்கள் மற்றும் ஏ.ஐ. திட்டங்களில் முறைகேடு"

கல்வித் துறையிலேயே ஊழல் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், மாணவர்கள் படிக்கும் பள்ளி நூலகப் புத்தகங்களில் கூட முறைகேடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

முன்னதாக தமது மேஜையில் மூன்று கோப்புகள் இருப்பதாகத் தாம் கூறியபோது, "திறந்துதான் பாருங்களேன்" என எதிர்க்கட்சியினர் சவால் விட்டதாகவும், அதன்படியே தற்போது அந்தக் கோப்புகளைத் திறந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த நினைத்தால், அதனை வைத்தே ஊழல் செய்துள்ளார்கள் என அவர் வேதனை தெரிவித்தார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

முறைகேடு

"கோவை, திருச்சி, நெல்லையில் நடந்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியே வரும்"

குறிப்பாக, கோவை அறிவுலகங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இதுபோக திருச்சி, திருநெல்வேலி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பது குறித்த விவரங்களும் இனி ஒவ்வொன்றாக வெளியே வரும் என எச்சரித்தார்.

மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையையே பாதிக்கும் இத்தகைய செயல்பாடுகளைப் பார்த்துக்கொண்டு தம்மால் சும்மா இருக்க முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழகத்தின் அனைத்துக் குடும்பத்தினரின் நலனுக்காகவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதை நினைவுகூர்ந்த முதலமைச்சர் விஜய், வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

"உங்கள் அண்ணன் எப்போதும் உங்களை நல்ல வழியில்தான் கொண்டு செல்வான்" என மாணவர்களுக்கு நம்பிக்கையளித்து அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

ADVERTISEMENT