வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது படி, வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதன் காரணமாக வரும் நாளை 23ஆம் தேதி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இந்தாண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அதன் பின்னர், மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
embed
காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்தாண்டின் முதல் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது!#SunNews | #Depression | #WeatherUpdate | #TNRains pic.twitter.com/vyTu5xThL4— Sun News (@sunnewstamil) May 22, 2024