Loading...
அசாமில் கொல்கத்தா - சாயிராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து: பயணிகள் அனைவரும் பாதுகாப்பாய் மீட்பு
அசாமில் கொல்கத்தா - சாயிராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

அசாமில் கொல்கத்தா - சாயிராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து: பயணிகள் அனைவரும் பாதுகாப்பாய் மீட்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
12:19 pm

செய்தி முன்னோட்டம்

அசாம் மாநிலத்தின் காமரூப் மாவட்டத்தில் உள்ள திகாரூ ரயில் நிலையத்தில் கொல்கத்தா - சாயிராங் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மற்றும் 5 பெட்டிகள் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலிருந்து மிசோரம் மாநிலத்தின் சாயிராங் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காலை 6:54 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கே.கே. சர்மா கூறுகையில்,"இன்று காலை 6:54 மணியளவில் ரயில் ஓட்டுநரால் ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், இன்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகித் தடம்புரண்டன" எனத் தெரிவித்தார். விபத்து குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பயணிகள்

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாய் மீட்பு

விபத்து நேரிட்ட உடனடியாக வடகிழக்கு எல்லை ரயில்வேயின் பொது மேலாளர் (GM) மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமுமில்லை; உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தங்களது தொடர் பயணத்திற்காக மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொல்கத்தா - சாயிராங் எக்ஸ்பிரஸ் ரயிலானது கிழக்கு அசாம் பகுதியை பராக் பள்ளத்தாக்கு, நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் முக்கிய ரயிலாகும்.

இரு இரயில் பாதைகளிலும் பெட்டிகள் தடம்புரண்டதால், அந்த வழித்தடத்தின் ரயில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT