ஜல்கான் ரயில் விபத்து எண்ணிக்கை 13 ஆக உயர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம்
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்திற்கிடமான தீவிபத்தால் பீதியடைந்து ரயிலில் இருந்து குதித்தவர்கள் மீது, எதிர் திசையில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் மோதியதில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
விசாரணை
தீப்பொறி கிளம்பியதாக வதந்தி
லக்னோவில் இருந்து மும்பைக்கு செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ், ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதன் பெட்டிகளில் ஒன்றில் தீப்பற்றியதாக உண்டான வதந்திகள் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
ரயிலை நிறுத்த பயணிகள் அவசரச் சங்கிலியை இழுத்துள்ளனர். எனினும் அவர்களில் பலர் ரயிலில் இருந்து குதித்து, அருகே இருந்த தண்டவளத்தில் இறங்கினார்கள்.
ஆனால், எதிரே வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
இருப்பினும், உயர்மட்ட ரயில்வே அதிகாரியை மேற்கோள்காட்டி, ரயில் பெட்டிக்குள் தீப்பொறி அல்லது தீ எதுவும் கவனிக்கப்படவில்லை என செய்தி நிறுவனமான பிடிஐ கூறியது.
நிவாரணம்
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் இரங்கல்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000, சிறு காயங்களுக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.