ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு
இரண்டு குஜராத் நகரங்கள்-அகமதாபாத் மற்றும் காந்திநகர்- மற்றும் மும்பையில் உள்ள நாரிமன் ஹவுஸ் (Nariman House) மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா(Gateway of India) ஆகியவற்றுக்கு எதிரான பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக NDTV குறிப்பிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் மற்றும் சிரியாவிற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படங்களில், குறிப்பிடப்படாத உயர்மட்ட இராணுவ தளங்களுக்கு எதிரான தாக்குதல்களும் தடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இவை, IS தீவிரவாத அமைப்புகளால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத தொடக்கத்தில், டெல்லியில் கைது செய்யப்பட்ட IS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிற ஷாநவாஸ் என்ற ஷஃபி உஸ்ஸாமாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இது இந்தியாவின் மீது நடத்தப்படவிருந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும்.
அலிகார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்பா?
அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக மாணவர்கள் இதில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதற்கான சந்தேகங்கள் உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. IS அமைப்பு தனது சதித்திட்டங்களை பற்றி ஆலோசிக்க, புனேவை தனது தலைநகரமாக மாற்றியுள்ளது எனவும், அதற்காக தான் ஷாநவாஸ் தேடப்பட்டு வந்ததாக கூறப்பட்டார். டெல்லியில் கைது செய்யப்பட்ட ஷாநவாஸ் தனது வாக்குமூலத்தில், தனது மனைவி இஸ்லாமுக்கு மாறுவதற்கு முன்பு ஒரு இந்துவாக இருந்ததாகவும், இருவரும் அலிகார் பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாகவும், அங்கு அவர்கள் பயங்கரவாதத் திட்டங்களில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகளிடம் கூறியது அதிர்ச்சி தகவல்
பணத்தேவைகளுக்காக தவறான வழியை தேர்ந்தெடுத்த ஷாநவாஸ்
ஷாநவாஸ் தனது சொந்த ஊரான ஜார்கண்டின் ஹசாரிபாக்கில் இருந்தபோது, பண தேவைகளுக்காகவும், தன்னுடைய பொருளாதார வசதியை மேம்படுத்திக்கொள்ளவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறியுள்ளான். அதன் தொடர்ச்சியாக, 2011 இல் யேமனில், அல்-கொய்தாவின் மூத்த செயல்பாட்டாளரான அன்பர் அல்-அவ்லாகியால் பயிற்சி பெற்றாதாகவும் கூறியுள்ளான்.
தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீர்
ஷாநவாஸ் தனது வாக்குமூலத்தில், தன்னுடைய பயிரிச்சையை நிறைவு செய்ததும், ஹிஸ்ப் உத்-தாஹிர் (HuT) என்ற இஸ்லாமிய அமைப்பில் சேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளான். அதன் நோக்கம் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் இஸ்லாமிய கலிபாவை மீண்டும் நிறுவுவதாகும். சில மாதங்களுக்கு முன்னர், தெலுங்கானாபோபால் மற்றும் மத்திய பிரதேசத்தில், HuT உடன் தொடர்புடைய NIA சோதனைகளை அரசு நடத்தியது. அதில் 16 பேர் கைது செய்யப்பட்டு, பல பயங்கரவாத சதிகள் முறியடிக்கப்பட்டது. இந்த அமைப்பு, பங்களாதேஷ், இந்தோனேசியா, சீனா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புனேவில் செயல்படும் ஹவாலா அமைப்புகள்
விசாரணையில், புனேவில் உள்ள தொகுதிகளுக்கு பணம் அனுப்பப்படும் ஹவாலா வழிகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஷாநவாஸ் கூறியுள்ளாராம். அந்த ஹவாலா பணம், வெடிகுண்டுகள் தயாரிக்கவும், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவலும் அவர் கூறியுள்ளார். அவரிடம் இருந்த புகைப்படங்கள் மற்றும் மேலும் சில ஆதாரங்களின் மூலம், அவரும் அவரின் கூட்டாளிகளும் இந்த முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.