
தமிழகத்தில் 8 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த மழை நிலை மே 8 ஆம் தேதி வரை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புபடி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் மேலாக வளிமண்டல கீழடுக்கு நிலவுகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் சந்திப்பதால், சில இடங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னல் மற்றும் மழை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பம்
நான்கு மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு; மற்ற இடங்களில் அதிகரிக்கும் வெப்பம்
கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் மற்ற மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு 3°C வரை அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, நேற்றைய நிலவரப்படி வேலூர் (40.9°C), மதுரை மற்றும் திருச்சி (40.4°C), ஈரோடு, கரூர், திருத்தணி (40°C) என வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம், சேலம், புதுச்சேரி, பாளையங்கோட்டை உள்ளிட்ட நகரங்களிலும் 38°C-க்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கிய நிலையில், காலை வெப்பம் 38°C-ஐ கடந்தது.
எனினும் பிற்பகலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பதிவானது.