
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை
செய்தி முன்னோட்டம்
நேற்று முதல், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் நேற்று முதல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
card 2
சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பில்லை
இதுபற்றி ட்வீட் செய்துள்ள தனியார் வெதர் பிளாகர் 'தமிழ்நாடு வெதர்மேன்' கூறியதாவது, சென்னையை பொறுத்தவரை மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்றும், விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை கனமழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு பெய்த கனமழை KTCC பெல்ட்டில்- காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக, IT நிறுவனங்கள் அதிகமுள்ள OMR சாலைகளில் கடும் மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அலுவலகம் செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.