தென் மாவட்ட மக்களே, இந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று மிகவும் கனமழை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கைப்படி, "பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேலாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழை மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், இதற்காக 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை
மற்ற மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்
விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பிற மாவட்டங்களில், இன்றும் நாளையும், பகல் நேர வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.
சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.