தமிழகத்தில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 15-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. அதோடு, குமரிக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இலங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Twitter Post
தமிழகத்தில் மழை நிலவரம்
இன்று, அக்டோபர் 10ஆம் தேதி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை, அக்டோபர் 11-ஆம் தேதி மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுடன் கூடுதலாக மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரங்களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.