
சென்னைக்கு 2 நாட்கள் 'ரெட்' அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) அதி கனமழை பொழிவு இருக்குமென ரெட் அலெர்ட் தந்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை, இடைவெளியின்றி தொடர்ந்து பெய்து வருகிறது.
தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதால், தமிழக அரசு மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ரெட் அலெர்ட்
வானிலை ஆய்வு மையம் அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட் அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இங்கு கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம், 204 மில்லிமீட்டர் மழை பதிவாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இவற்றோடு தமிழகத்தில் வேறு சில மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
ஆரஞ்சு அலர்ட்:
அக்டோபர் 15: ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை
அக்டோபர் 16: ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர்
அக்டோபர் 17: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Chennai Red alert issued by IMD for today and tomorrow. #Chennairains
— Vijayanand - Data Analyst (@vijay27anand) October 15, 2024
Today 15/10 - Red
Tomorrow 16/10 - Red
Thursday 17/10 - Yellow. pic.twitter.com/MnnNkRbJur