Page Loader
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இன்று கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2024
11:53 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகர் சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு பரவலாக மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post