
10 மாநிலங்களில் இன்று கனமழை: நிலச்சரிவு அபாயம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையின் படி, இன்று 10 மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக, குறிப்பாக வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று, உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில், மழை மற்றும் வெள்ளம் காரணமாக தாராலி கிராமத்தின் பெரும்பகுதி அழிந்து, 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கனமழை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாநிலங்கள்
உத்தரகாண்ட் ஹிமாச்சல் பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் உத்தரபிரதேசம் (வடகிழக்கு பகுதிகள்) கேரளா கர்நாடகா (சில பகுதிகள்) ஒடிஷா மேற்கு வங்கம் உள்பட 10 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்படக்கூடிய அபாய நிலை காரணமாக, மாநில அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வானிலை மையம், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. பாதிப்புகள் ஏற்படக்கூடிய இடங்களில் மீட்புப் பணிகள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.