
ஓசூரில் புதிய விமான நிலையத்துக்கான இறுதி சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிப்பு
செய்தி முன்னோட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பான இறுதி சாத்தியக்கூறு (Feasibility) ஆய்வு அறிக்கையை, இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தொழில்துறை வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் தேவையை முன்வைத்து, ஓசூரிலும் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கைகள் எழுந்து வந்தன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | ஓசூர் புதிய விமான நிலையம் - இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்#SunNews | #Hosur pic.twitter.com/DhhYDxrSpl
— Sun News (@sunnewstamil) April 22, 2025
விவரங்கள்
விமான நிலையம் அமைக்க 2 இடங்கள் தேர்வு
பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, 2000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் பன்னாட்டு தரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, ஓசூர் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி கோரி, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முன்வைத்தது.
தற்போது, இந்த இரு இடங்களிலும் விமான நிலையம் அமைக்க எந்தவொரு தடையும் இல்லை என்றும், திட்டம் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளதெனவும் சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.