கனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு, புனேவில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
இடைவிடாத மழையால் புனே மற்றும் கோலாப்பூரில் கடுமையாக மழைநீர் தேங்கியுள்ளது, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 150 செ.மீ.க்கும் அதிகமான மழைப்பொழிவினைக் கண்ட மும்பையிலும் நிலைமை மோசமாக உள்ளது.
புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை தொடர்பான சம்பவங்களில் நான்கு பேர் இறந்தனர்.
இந்த நிலையில், கனமழைக்கு மத்தியில், ஏர் இந்தியா நிறுவனம் மும்பைக்கு செல்லும் சில விமானங்கள் தாமதமாகி, திருப்பி விடப்பட்டதாக பயணிகளுக்கு அறிவித்தது.
இதேபோல், இண்டிகோவும் எக்ஸ்-இல் இதேபோல ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்க அறிவுறுத்துகிறது.
வானிலை எச்சரிக்கை
கனமழை தொடர வாய்ப்புள்ளதாக IMD எச்சரிக்கை
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் நிலைமையை ஆய்வு செய்தார்.
மேலும் மும்பை, புனே மற்றும் தானே பிரதேச ஆணையர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசி, விழிப்புடன் இருக்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகவும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், வரும் நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
புனேவில், மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்த பட்சம் நான்கு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதில் மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
கனமழையின் காரணமாக, மகாராஷ்டிராவில் பல நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.