தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தமிழகத்தில் பெய்த பருவமழையாலும், இரு தினங்களுக்கு முன்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களை புரட்டி போட்ட புயல் மழையாலும், பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டது.
அதே வேளையில் சென்னையில் இன்னும் புயலின் தாக்கம் ஓயவில்லை. பல பள்ளிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
அதன் காரணமாக, சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஒருசில இடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
அதன் தொடர்ச்சியாக, நவ.,7, 8 தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் முறையே 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்
#தகவல்பலகை | தமிழ்நாடு முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு தேதிகளில் மாற்றம்!#SunNews | #HalfYearlyExam pic.twitter.com/exHszntZhM
— Sun News (@sunnewstamil) December 6, 2023