LOADING...
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்?
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2025
01:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இயற்கை மண்டல பாதுகாப்பு, காட்டுத் தீ மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களுக்காக, வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மலையேற்ற சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை தமிழக வனத்துறை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சுற்றுலா துறை சார்பாக, இயற்கை எழில் சூழ்ந்த மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் ட்ரக்கிங் பயணம் கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பலர் பயணம் பேர்கொண்ட நிலையில் தற்போது தடை விதித்துள்ளது வனத்துறை. தமிழகத்தில் இந்த திட்டம் கோவை, நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 40 இடங்களில் செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வெயில்

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் வெப்பநிலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து உள்ளது. அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக, வானிலை ஆய்வு மையம் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மேலதிக வெப்பநிலை மற்றும் காட்டுத் தீ போன்ற அபாயங்கள் காரணமாக, வனத்துறை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மலையேற்ற நடைபயணத்திற்கு தடை விதித்து உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்த முடிவு, இயற்கை மண்டல பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும், வெப்பநிலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயங்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இந்த தடை உத்தரவு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் நடைபயணிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பிற்காகவும் என வனத்துறை தெரிவித்துள்ளது.