
பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பிவிடப்படும் விமானங்கள்
செய்தி முன்னோட்டம்
பெங்களூருவில் கடந்த மாதம் வரை நிலவி வந்த குடிநீர் பிரச்னை மற்றும் வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் கடந்த சில நாட்களாக அங்கே மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வானிலை மாறியுள்ளது.
அதே நேரத்தில் நேற்று இரவு முதல், இடிமின்னலோடு கூடிய கனத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சிங்கப்பூர், டெல்லி, ராஞ்சி, கோவா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மோசமான வானிலை காரணமாக வானத்திலேயே விமானங்கள் நீண்ட நேரம் வட்டம் அடித்துக்கொண்டிருந்த விமானங்கள், ஒரு கட்டத்தில் சென்னையில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது.
சென்னை விமான நிலையம் அனுமதி அளித்தபின்னர், 10க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
embed
பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை
#JustIn | பெங்களூருவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் அங்கு செல்ல வேண்டிய 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்ன. டெல்லி, மும்பை, கோவா, ஹைதராபாத், ராஞ்சி, லக்னோ உள்ளிட்ட இடங்களில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்.#SunNews |...— Sun News (@sunnewstamil) May 10, 2024