FIFA உலகக் கோப்பையில் இப்படியொரு ட்விஸ்டா? ஸ்பெய்னுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இப்படியொரு தொடர்பா?
செய்தி முன்னோட்டம்
நியூ ஜெர்சியில்நேற்று நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியின் வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஃபெர்ரன் டோரெஸ் அடித்த அதிரடி கோல் ஸ்பெயினுக்கு வரலாற்று வெற்றியை தேடித்தந்தது.
தவெக கொடி
கேரளா பேரணியில் தவெக கொடி - இணையத்தில் வைரல்
கிரிக்கெட்டை தாண்டி கால்பந்தை உயிராகக் கொண்டாடும் கேரளாவில், கடந்த ஒன்றரை மாதங்களாகவே உலகக் கோப்பை ஜுரம் தொற்றிக் கொண்டது.
குறிப்பாக, மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக அம்மாநில ரசிகர்கள் அர்ஜென்டினா நாட்டின் கொடிகளுடன் பைக் பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்தி வந்தனர்.
அப்படி ஒரு கிராமத்தில் ஒட்டுமொத்த ஊரே அர்ஜென்டினா கொடியுடன் பேரணி சென்ற போது, அங்கிருந்த இரண்டு சிறுவர்கள் மட்டும் நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் கொடியை கையில் ஏந்தி ஆட்டியுள்ளனர்.
ஒற்றுமை
ஸ்பெயின் வெற்றியைக் கொண்டாடும் தவெகவினர்
தவெக கட்சியின் கொடியும் (சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் உள்ளடக்கியது), ஸ்பெயின் நாட்டின் தேசியக் கொடியும் ஒரே மாதிரியான வண்ண அமைப்பை கொண்டுள்ளதால், இப்போட்டித் தொடரில் அந்த சிறுவர்கள் ஸ்பெயின் அணிக்கு ஆதரவாக அந்தக் கொடியை ஆட்டியுள்ளனர்.
தற்போது ஸ்பெயின் உலகக் கோப்பையை வென்றுள்ளதால், "சிறுவர்கள் விரும்பிய தளபதி விஜய்யின் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது; தவெக கொடியின் நிறமும் ஸ்பெயின் கொடியின் நிறமும் ஒன்று என்பதால் இது தளபதியின் ஆசி பெற்ற அணி" என்று சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் நெகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
மற்றொரு ஒற்றுமை
TVK -விற்கும், ஸ்பெயின் அணிக்கும் மற்றொரு ஒற்றுமை
கொடியை தவிர மற்றொரு வரலாற்று ஒற்றுமையையும் TVK ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அதாவது, விஜய் தனது இளம் வயதில், கருணாநிதியால் தட்டி கொடுத்து வளர்க்கப்பட்டவர்.
தற்போது விஜய் தனது எதிர்க்கட்சியாக கருதுவதும் கருணாநிதியின் திமுகவைதான்.
அவர்களை வீழ்த்தியே தற்போது அரசு அரியணையில் அவர் அமர்ந்துள்ளார்.
அதே போல ஸ்பெயின் அணியில் உள்ள யாமலும், அர்ஜென்டினாவில் மெஸ்ஸியால் ஈர்க்கப்பட்டு கால்பந்து விளையாட வந்தவர்.
தற்போது அவரை தோற்கடித்து உலகக்கோப்பையை வென்றுள்ளார்.
இந்த இருவரின் இளம் வயது புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Bonkers… we schooled them pic.twitter.com/RpIjN1qUds
— SureshSamy2.0 (@sureshsamyTVK) July 19, 2026