
தமிழகம் முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 நாள் கோடை விடுமுறை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் 15 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே 8 குடும்ப நல நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
மற்ற நீதிமன்றங்கள் போலவே குடும்பநல நீதிமன்றங்களுக்கும் கோடை விடுமுறை வேண்டுமென பெண் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, தற்போது மே 1 முதல் மே 15 வரை விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குடும்பநல நீதிமன்றத்தின் அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும் எனவும், அங்கே பராமரிப்பு, ஆவண நடவடிக்கைகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை#Malaimurasu #NewsUpdate #MadrasHC pic.twitter.com/3UYaAhANkM
— Malaimurasu TV (@MalaimurasuTv) April 24, 2025