LOADING...
ரஜினிகாந்த் வழியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை
இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை

ரஜினிகாந்த் வழியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 14, 2025
01:36 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் இமயமலையில் அமைந்துள்ள பாபா கோவிலில் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. அண்மையில், அண்ணாமலையில் மாநிலத் தலைமை பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். வானகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அதேவேளை, அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள் 

பதவி விலகியதும் ஆன்மீக பயணத்தை கையிலெடுத்த அண்ணாமலை

புதிய மாநில தலைமைக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசை தோற்கடிக்க அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும், அண்ணாமலை தெரிவித்தார். இதற்குப் பின்னர், அவர் தற்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். டெல்லி வழியாக உத்தரகண்ட் சென்ற அவர், கேதர்நாத் உள்ளிட்ட புனிதத் தலங்களைப் பார்வையிட திட்டமிட்டுள்ளார். அவருடன் ரஜினிகாந்தின் நண்பரும் உடன் இருக்கும் புகைப்படமும், இமயமலையில் உள்ள பாபா கோவிலில் அவர் தரிசனம் செய்த புகைப்படமும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அவரது ஆன்மிகப் பயணத்திற்கு பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.