Loading...
6 மாதங்களை கடந்த தவெக ஆட்சி: முதலமைச்சர் விஜய் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்னென்ன
தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை வழிநடத்துவதில் முதலமைச்சர் விஜய் முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.

6 மாதங்களை கடந்த தவெக ஆட்சி: முதலமைச்சர் விஜய் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்னென்ன

எழுதியவர் Vasuki
Nov 24, 2026
08:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், ஆட்சியை வழிநடத்துவதில் பல்வேறு சவால்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். 234 தொகுதிகளில் 108 இடங்களை மட்டுமே கொண்டுள்ள தவெக, ஆட்சியைத் தக்கவைக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பியுள்ளது. குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் அரசை விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் முரண்பட்டு நிற்பது தனிப்பெரும்பான்மை இல்லாத விஜய் அரசுக்கு பெரிய குடைச்சலாக மாறியுள்ளது.

காவிரி மற்றும் திருப்பரங்குன்றம்

காவிரி - மேகதாது விவகாரம் மற்றும் திருப்பரங்குன்றம் தீபச் சிக்கல்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சூழலில், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிப்பதால், மேகதாது அணையைத் தடுத்து நிறுத்துவதில் விஜய்க்கு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலைத்தூணில் இன்று ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இவ்விரு முக்கியப் பிரச்சினைகளையும் விஜய் அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு 

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சர்ச்சை மற்றும் சட்டம் - ஒழுங்கு கேள்விகள்

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்த விஜய்க்கு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், செஞ்சியில் சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் 44 நாட்களுக்கு மேலாகியும் துப்பு துலங்காதது அரசுக்குத் தலைவலியாகியுள்ளது.

சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் விஜய் அரசு கோட்டை விடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

ADVERTISEMENT

ஓரணியில் எதிர்க்கட்சிகள்

ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகளும், சொந்த எம்எல்ஏக்களால் ஏற்படும் தலைவலியும்

அரை நூற்றாண்டுகளாக எதிரெதிர் துருவங்களாக இருந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தற்போது தவெக அரசைத் தினசரி விமர்சித்து வருகின்றன.

மத்தியில் ஆளும் பாஜகவும் தவெகவின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இவர்களை விடவும், ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிடுவது மற்றும் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது எனச் சொந்தக் கட்சி எம்எல்ஏ-க்களே ஆட்சிக்கு அதிக நெருக்கடியை உருவாக்குவது முதலமைச்சர் விஜய்க்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

ADVERTISEMENT