Loading...
அதிதீவிர புயலாக மாறும் 'அக்வான்': நவம்பர் 20-ல் நெல்லூர் - டுனி இடையே கரையைக் கடக்கிறது
'அக்வான்' நவம்பர் 20-ல் நெல்லூர் - டுனி இடையே கரையைக் கடக்கிறது

அதிதீவிர புயலாக மாறும் 'அக்வான்': நவம்பர் 20-ல் நெல்லூர் - டுனி இடையே கரையைக் கடக்கிறது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 16, 2026
04:45 pm

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று 'அக்வான்' அதிதீவிர புயலாக மாறி, வரும் நவம்பர் 20-ஆம் தேதி ஆந்திராவின் நெல்லூர் - டுனி இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 145 கி.மீ. வேகம் வரையிலும் மிகக் கடுமையாக வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலெர்ட்

சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

புயலின் நகர்வு காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு தீவிரமடையவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு வரும் நவம்பர் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வருவதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனால், வரும் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

KTCC

KTCC பகுதிகளுக்கான வானிலை நிலவரம்

புயலின் இறுதி நகர்வு எங்கு அமையும் என்பதைப் பொறுத்தே KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) பகுதிகளுக்கான மழைவாய்ப்புகள் முழுமையாக நிர்ணயிக்கப்படும் என தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், புயல் சற்று தெற்கு நோக்கித் திரும்பி நெல்லூருக்கு அருகில் அல்லது அதற்கு தெற்கே கரையை கடந்தால், சென்னை மற்றும் வட மாவட்டங்கள் மிகக் கனமழைக்கான வாய்ப்பைப் பெறக்கூடும்.

இந்த தடம் அமைந்தால் சென்னைக்கு எதிர்பார்த்ததை விடக் கூடுதல் மழைப்பொழிவு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT