
மக்களே உஷார்....தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை இருக்குமாம்!
செய்தி முன்னோட்டம்
அக்னி நட்சத்திர காலம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் - குறிப்பாக மதுரை, சென்னை, திருச்சி, வேலூர் பகுதிகளில் - வெப்பநிலை சாதாரணத்தை விட அதிகமாகவே பதிவாகி வருகிறது.
சில இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பமும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, சில இடங்களில் மழை (கோடை மழை) பெய்தாலும், வெப்பத்தைக் குறைக்கும் அளவுக்கு இல்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்ட நிலையில், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் மலை பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதுபடி, இன்று (ஏப். 28) காலை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் அதிகம் உள்ளது.
இதற்கு காரணம், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் காற்று வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஏப்ரல் 29 முதல் மே 3 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்படுகிறது.
சென்னையை பொறுத்த வரை, இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.