
உறுதியானது பாஜக- அதிமுக கூட்டணி; EPS தலைமையில் தேர்தலை சந்திக்கபோவதாக அமித்ஷா அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தமிழக பாஜகவில் ஒரு முக்கிய தலைமை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல கூட்டணி விவகாரம் குறித்தும் உறுதியான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஒரே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தோன்றினார்.
உடன், முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் அமர்ந்திருந்தார்.
இதன் மூலம் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக- பாஜக கூட்டணி உறுதியானதை தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!#SunNews | #ADMKBJPAlliance | #NDA | #AmitShah pic.twitter.com/i7GdFwpFUF
— Sun News (@sunnewstamil) April 11, 2025
தலைமை
EPS தலைமையில் தேர்தலை சந்திக்கபோவதாக அறிவிப்பு
"இந்தத் தேர்தல் தேசிய அளவில் நரேந்திர மோடியாலும், தமிழகத்தில் இபிஎஸ் மற்றும் அதிமுகவாலும் வழிநடத்தப்படும்" என்று பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா கூறினார்.
1998 முதல் அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வருவதாகவும், பிரதமர் மோடியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த காலங்களில் இணைந்து பணியாற்றியதாகவும் ஷா சுட்டிக்காட்டினார்.
இந்த சூழலில், அண்ணாமலைக்குப் பதிலாக தமிழ்நாட்டின் புதிய பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவரது பெயரை அண்ணாமலையே முன்மொழிந்தார் எனவும், தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்ப மனு தராததால் ஒரு மனதாக நயினார் நாகேந்திரன் தேர்வானார் எனவும் கூறப்படுகிறது.
நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.