தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளன; என்னென்ன வசதிகள்?
செய்தி முன்னோட்டம்
'வந்தே பாரத்' ரயில்களுக்கு இணையாக, கடந்த ஜனவரியில், ஏ.சி. இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய புதிய 'அம்ரித் பாரத்' ரயில்களின் இயக்கம் தொடங்கியது.
அது நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் 26 'அம்ரித் பாரத்' ரயில்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன.
அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி -ஷாலிமர் மற்றும் தாம்பரம் -சந்திரகாசி ஆகிய இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும்.
திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்கள் வழியாக செல்லும்.
அதேபோல, சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் மற்றொரு ரயில், வடமாநிலங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழகத்துக்கு வருகிறது அம்ரித் ரயில்கள்#AmritBharat | #TN | #trains | #nonACcoachhttps://t.co/y4W3uzOWeZ pic.twitter.com/oUWnfgLAp7
— Dinamalar (@dinamalarweb) October 22, 2024
வசதிகள்
அம்ரித் பாரத் ரயிலில் உள்ள வசதிகள் என்ன?
அம்ரித் பாரத் ரயில்கள் 12 முன்பதிவு மற்றும் 8 முன்பதிவில்லா பொது பெட்டிகளை உட்பட, மொத்தம் 22 பெட்டிகளை கொண்டுள்ளன.
அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, spacious seating, மற்றும் அடுத்த ரயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி உள்ளது.
'ஜீரோ டிஸ்சார்ஜ்' மாடுலர் கழிப்பறைகள் மற்றும் அதிநவீன வசதியுடன் கூடிய இணைப்பு, ரயிலின் இயக்கத்தை மென்மையாகவும் சீராகவும் செய்கின்றன.
'புஷ்-புல்' தொழில்நுட்பத்தின் மூலம், இருபுற இன்ஜின்கள் கொண்டு ரயில் 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.