LOADING...
சமையல் கேஸ் விலை குறையுமா? வரிச் சலுகை கிடைக்குமா? பட்ஜெட் 2026 இல் இல்லத்தரசிகளின் முக்கிய கோரிக்கைகள்
மத்திய பட்ஜெட் 2026இல் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்புகள்

சமையல் கேஸ் விலை குறையுமா? வரிச் சலுகை கிடைக்குமா? பட்ஜெட் 2026 இல் இல்லத்தரசிகளின் முக்கிய கோரிக்கைகள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 29, 2026
08:39 am

செய்தி முன்னோட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது 9வது பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வீட்டுச் செலவுகளுக்கு மத்தியில், இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கும், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கும் ஒரு கை கொடுக்கும் பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இல்லத்தரசிகளின் முதன்மையான கோரிக்கை சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதாகும். பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் மற்றும் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலையைச் சீராக வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் சுமையாக இருக்கும் மத்திய ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் பொருட்களின் விலையைக் குறைக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

சலுகை

வரிச் சலுகை மற்றும் கூடுதல் வருமானம்

சம்பளம் வாங்கும் குடும்பங்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம், கையில் புழங்கும் பணத்தின் அளவு அதிகரிக்கும். ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்: புதிய வரி முறையின் கீழ் நிலையான கழிவு வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாகும். காப்பீடு சலுகைகள்: உடல் நலக் காப்பீட்டு பிரீமியத்தைக் குறைப்பது குடும்பங்களின் சேமிப்பை உயர்த்த உதவும் என்று இல்லத்தரசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னுரிமை

பெண்களுக்கு முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு

பட்ஜெட் 2026 இல் பெண்களை மையமாகக் கொண்ட பல திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன: பெண் தொழில்முனைவோர்: இல்லத்தரசிகள் தங்களின் கலைத்திறன் அல்லது சிறு தொழில்களைத் தொழில்துறையாக மாற்ற ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்களும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் கோரப்பட்டுள்ளன. இதற்காக முத்ரா மற்றும் ஸ்டாண்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்கள் வலுப்படுத்தப்படலாம். ரயில்வே பாதுகாப்பு: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் மற்றும் தூய்மையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நிதி மேலாண்மை: ஜன் தன் கணக்குகள் மூலம் பெண்களுக்கு எளிதான கடன் வசதிகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை விரிவுபடுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

வேலைவாய்ப்பு

வளர்ந்த பாரதம் மற்றும் வேலைவாய்ப்பு

கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு VB-G RAM G போன்ற புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளது. இது இல்லத்தரசிகளின் வருமானத்தைப் பெருக்கி, குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும்.

Advertisement