LOADING...
பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு
திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற. ' மகளிர் உரிமை மாநாட்டில்' பங்கேற்க 5 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தமிழ்நாடு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு

எழுதியவர் Srinath r
Oct 15, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் வரலாற்றுக் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மகளிர் உரிமை மாநாட்டில்' பங்கேற்ற முக ஸ்டாலின் இவ்வாறு பேசினார். மேலும் பேசியவர், இந்தியாவில் ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே பண்பாடு என ஒற்றைக் கட்சி ஆட்சியை கொண்டு வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக குற்றம் சாட்டினர். அப்படி நடந்தால் ஒரே மனிதர் என்ற எதேச்சதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என பேசிய முக ஸ்டாலின், எனவே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

2nd card

மகளீரை ஏமாற்றும் பாஜக- கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் நெருங்கி வருவதால், மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு கொண்டு வருவதை போல பாஜக ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்த ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், பிரதமர் மோடியை பாராட்டி இருக்கலாம் என கூறியவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து, அதன் பின் தொகுதி வரையறை செய்யப்பட்டு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என இந்த மசோதா கூறுவதை, மகளிர் ஏமாற்றும் செயல் என முதல்வர் விமர்சித்தார்.

3nd card

பெண்கள் மீது பாஜகவிற்கு உண்மையான அக்கறை இல்லை

இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து பேசிய முதல்வர், கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த ஐக்கிய முன்னணி அரசும், கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் இந்த மசோதாவை தாக்கல் செய்ததை சுட்டிக்காட்டினார். மேலும் பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி எனவும், பெண்கள் வீட்டுக்குள் முடங்கி கிடைக்க வேண்டுமென அது நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார். ராஜீவ் காந்தி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார் எனவும் அதன் நீட்சியாகவே இன்று பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50% இட ஒதுக்கீடு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

4rd card

"எந்த காலத்திலும் சமூக நீதியை விட்டு விடக்கூடாது"- முதல்வர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததை சுட்டிக்காட்டி பேசியவர், அப்படி வழங்கப்பட்டால் தான் அவர்களது குரல் சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் ஒலிக்கும் என தெரிவித்தார். அவர்களது குரல் ஒலிக்க கூடாது என பாஜக நினைப்பதாகவும், இது பாஜகவின் சூழ்ச்சி எனவும் முதல்வர் விமர்சித்தார். பெண்களுக்கு சாதி ரீதியாக இட ஒதுக்கீடு கேட்டால், பெண்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்த பார்க்கிறார்கள் என பிரதமர் குற்றம் சாட்டுகிறார் என்ற முதல்வர், பெண்களுக்கான இந்த உரிமையை விட்டுக் கொடுத்து விட்டால் அடுத்தடுத்து சமூகநீதி காவு வாங்கப்படும் என்றும், எந்த சூழலிலும் சமூக நீதியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற உறுதியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

' இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் முக்கிய பெண் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள்