ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்: டாப் 5 ஹிட் மற்றும் பிளாப் படங்கள்
இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர்ஸ்டார் எனவும், அவருடைய படங்கள் நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என்றே அறிந்திருப்பார்கள். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ரஜினியின் சினிமா வாழக்கையில் சில பிளாப் படங்கள் இருக்கத்தான் செய்கிறது. வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரஜினியின் திரை வாழ்க்கையில் டாப் 5 பிளாப் படங்களும், அதே போல சூப்பர்ஹிட் படங்களும் எவை என்பது பற்றி ஒரு சிறு பார்வை இதோ உங்களுக்காக:
ரஜினியின் டாப் ஃபிளாப் படங்கள்
ரஜினியின் ஆரம்பகால கிளாசிக் படங்கள் பலவும் ஃபிளாப் படங்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆம், தப்பு தாளங்கள், அவள் அப்படிதான், எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்கள் தற்போது ரசிக்கப்பட்டாலும் அவை ஃபிளாப் என்கிறது IMDB அறிக்கை. ஸ்ரீ ராகவேந்திரா: தற்போது பலரால் விரும்பப்பட்டாலும் வெளியான போது இப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. எனினும் தற்போது வரை ராகவேந்திரர் கதாபாத்திரத்தில் ரஜினியை போல கச்சிதமாக பொருந்தியவரும் எவரும் இல்லை. வள்ளி: நட்ராஜ் இயக்கத்தில், ரஜினி தயாரித்து நடித்திருந்த இந்த படமும் அவருடைய கேரியரில் மிகப்பெரிய அடி என்றே கூற வேண்டும். இப்படத்தில் முன்னணி வேடத்தில் ரஜினி நடிக்கவில்லை என்றாலும் அது அவருடைய படமாகவே ரசிகர்கள் ஆதரித்தனர்.
ரஜினியின் டாப் ஃபிளாப் படங்கள்
பாபா: இது ரஜினியின் கதை என கூறப்பட்டாலும், நிஜத்திற்கு சற்றும் அருகே இல்லாத திரைக்கதையும், ரஜினியின் தோற்றமும் பலரை ஈர்க்கத்தவறியது. கோச்சடையான்: சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அனிமேஷன் கதையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படமும் மண்ணை கவ்வியது என்றே கூற வேண்டும். அண்ணாத்தே: சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மோசமான வரவேற்பை பெற்றது. இருப்பினும் ஒரு ஆறுதலாக இப்படத்தில் ஈர்க்கப்பட்டு இதை தெலுங்கிலும் போலோ ஷங்கர் என ரிமேக் செய்தனர். இப்படங்களை தவிர, லிங்கா, தர்பார், லால் சலாம் என மேலும் சில படங்கள் ரஜினியின் தோல்வி படங்களின் வரிசையில் உள்ளது.
ரஜினியின் ஹிட் படங்கள் லிஸ்ட்
ரஜினியின் ஹிட் மற்றும் ப்ளாக்பஸ்டர் படங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம். தளபதி: மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி, அரவிந்தஸ்வாமி உள்ளிட்டவர்கள் நடித்த இந்த படம் எவர்க்ரீன் கிளாசிக் வகை. படத்தின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாகும். சிவாஜி: ஷங்கர் உடன் முதல்முறையாக ரஜினி இணைந்த படம் சிவாஜி. அதிக பொருட்செலவில் உருவான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ரஜினிக்கு வழங்கப்பட்ட சம்பளம் மட்டுமே ரூ.26 கோடி எந்திரன்: ஷங்கர் உடன் அவர் இணைந்த இந்த sci-fi படம், பல மொழிகளிலும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தில் இரு வேடத்தில் ரஜினி நடித்த மாறுபட்ட நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
ரஜினியின் ஹிட் படங்கள் லிஸ்ட்
சந்திரமுகி: ரிமேக் படமாகவே இருந்தாலும், ரஜினியின் ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்ட இந்த படத்தின் கதையின் நாயகி வேறொரு கதாபாத்திரமாக இருந்தாலும், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினியின் பெருந்தன்மையை பாராட்டினர். இப்படமும் மாபெரும் வெற்றி பெற்று பல மொழிகளில் ரிமேக் செய்யப்பட்டது. ஜெயிலர்: ரஜினியின் சமீபத்திய வெளியீடான ஜெயிலர் சரித்திர வெற்றி பெற்றது. நெல்சனின் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் மாபெரும் தூண் அனிருத்தின் இசை என்றால் அது மிகையில்லை. இப்படம் ரூ. 650 கோடி வசூலித்து தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்தது. இயல்பான கதை, அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாத எதார்த்தமான நடிப்பு போன்றவை இப்படத்தின் பிளஸ். இப்படத்தின் வெற்றி காரணமாக இதன் அடுத்த பாகமும் தயாரிப்பு திட்டத்தில் உள்ளது.