
LCU வில் இணைந்தார் ரவி மோகன்: 'பென்ஸ்' படத்தில் இரண்டாவது ஹீரோ எனத்தகவல்
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரவி மோகன் தற்போது தனது திரைத்தொழிலில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாக வெற்றிகரமாக நடித்து வந்த அவர், இப்போது தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் களமிறங்க உள்ளார். தனது சொந்த நிறுவனம் "ரவி மோகன் ஸ்டூடியோஸ்" மூலம் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த ஸ்டூடியோவின் தொடக்க விழா நேற்று மிக விமர்சனமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், கார்த்தி, SJ சூர்யா, ஜெனிலியா, யோகி பாபு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள முதல் படமான 'ப்ரோ கோட்' படத்தின் பூஜையும், அவருடைய இயக்கத்தில், யோகி பாபுவை ஹீரோவாக வைத்து உருவாகவுள்ள 'Gentleman' படத்தின் பூஜையும் நடைபெற்றது.
LCU
LCU-வில் இணையும் ரவி
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய 'Lokesh Cinematic Universe (LCU)'யில் ரவி மோகனும் இணைந்துள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தில் ரவி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், நிவின் பாலி வில்லனாகவும் நடிக்கின்றனர். முதலில் ரவி வில்லனாக நடிக்கிறார் என செய்திகள் வந்திருந்தாலும், புதிய தகவலின்படி ரவி மோகன் இப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார் என்று தெரிகிறது. இது அவருக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. இதற்கிடையே, அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'கராத்தே பாபு' திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.