LOADING...
ரஜினியின் 'ஜெயிலர் 2' ரிலீஸ்: சன் பிக்சர்ஸ் லாக் செய்த மாஸ் தேதி
ஜெயிலர் 2, செப்டம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட முடிவு

ரஜினியின் 'ஜெயிலர் 2' ரிலீஸ்: சன் பிக்சர்ஸ் லாக் செய்த மாஸ் தேதி

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2026
04:12 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாவதால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகப் பல்வேறு கட்ட விவாதங்களில் இருந்த படக்குழு, தற்போது இந்த மெகா ஆக்ஷன் என்டர்டெய்னரை செப்டம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியிட இறுதி முடிவு செய்துள்ளது. 'Filmfare' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 11 அன்று படத்தை ரிலீஸ் செய்யத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால், நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை குறிவைத்து இந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு நிறைவும், சன் பிக்சர்ஸ் கொண்டாட்டமும்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மார்ச் 10 அன்று சென்னையில் தொடங்கிய 'ஜெயிலர் 2' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று ஏப்ரல் மாத இறுதியில் முழுமையாக நிறைவடைந்தது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. தற்போது அனிருத்தின் பின்னணி இசை மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்திலிருந்து சில முக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. முதல் பாகம் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததால், இந்த இரண்டாம் பாகத்தின் மீது அகில இந்திய அளவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Advertisement