LOADING...
ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் உடன் இணையும் புதிய நட்சத்திரப் பட்டாளம் யார் யார் தெரியுமா?
'ஜெயிலர் 2' அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகும்

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் உடன் இணையும் புதிய நட்சத்திரப் பட்டாளம் யார் யார் தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2026
02:29 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர் 2' திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தையும் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ளார். நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில், முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு ஆகியோருடன் பல புதிய முகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு இதில் முதன்மை வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் அன்னா ரேஷ்மா ராஜன், கோட்டயம் நசீர், சுஜித் சங்கர் மற்றும் வினீத் தட்டில் டேவிட் ஆகிய கேரள நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

நடிகர்கள் விவரம்

களமிறங்கும் தமிழ் மற்றும் பாலிவுட் பிரபலங்கள்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் சந்தானம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, 'சேக்ரட் கேம்ஸ்' புகழ் ஜதின் சர்னா, கன்னட நடிகை மேக்னா ராஜ் சர்ஜா மற்றும் பகவதி பெருமாள் (பக்ஸ்) ஆகியோரும் இணைந்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் ஒரு மிக முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்துடன் முழுமையாக நிறைவடைந்தது. ரஜினிகாந்துடன் 6-வது முறையாகவும், நெல்சனுடன் 5-வது முறையாகவும் கைகோர்த்து அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Advertisement