LOADING...
40 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கிறார்களா? இயக்குனர் இவரா?
இந்த முயற்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

40 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கிறார்களா? இயக்குனர் இவரா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2025
02:33 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு வேளை அப்படி நடந்தால், இது நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் அவர்கள் இணையவிருக்கும் முதல் கூட்டணியாக இருக்கும்! இந்த திட்டம் இரண்டு வயதான கேங்ஸ்டர்களைச் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முயற்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'இயக்குனர் இமயம்' பாலச்சந்தரின் சீடர்கள் மீண்டும் திரையில் ஒன்றாக தோன்றினால், அது ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தயாரிப்பு விவரங்கள்

கமல்ஹாசன் இணைந்து தயாரிக்கும் படம்

இந்தப் படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பாக இருக்கும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான 'விக்ரம்' படத்தையும் அவரே தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ரெட் ஜெயண்ட் சமீபத்தில் வெளியான 'தக் லைஃப்' மற்றும் இந்தியன் 2 போன்ற திட்டங்களை தயாரித்தது. இந்த திட்டம் சாத்தியமானால், 'கூலி' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் அடுத்த படமாக இருக்கும் என்றும், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கைதி 2' மேலும் தாமதமாகலாம் எனவும் கூறப்படுகிறது.