கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள்
டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இப்படங்களை பற்றிய முக்கிய அப்டேட்கள் சில சென்ற வார இறுதியில் வெளியாயின. அவற்றில் சில முக்கியமானவை உங்கள் பார்வைக்கு: இந்தியன் 2: கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வரும் மே 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் ஜூன் முதல் வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
அடுத்த வருடம் 'தல' பொங்கல்!
குட் பேட் அக்லி: நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்குவதற்கு முன்னரே படத்தின் வெளியீட்டு தேதியை குறித்துள்ளது படக்குழு. அதன்படி, இப்படம், 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, படத்தின் போஸ்டரும் இதனுடன் வெளியிடப்பட்டது. தளபதி 69: விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜயின் VFX பணிகள் நிறைவடைந்ததாக வெங்கட் பிரபு அறிவித்தார். GOAT வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதனை அடுத்து விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில், தேசிய விருது வென்ற நடிகை அபர்ணா பாலமுரளி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.