Loading...
பிரசவத்திற்கு பின் உடல் எடை கேலி செய்யும் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த கத்ரீனா கைஃப்
உடல் எடை ட்ரோல்களுக்கு நடிகை கத்ரீனா கைஃப் விளக்கமளித்துள்ளார்.

பிரசவத்திற்கு பின் உடல் எடை கேலி செய்யும் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த கத்ரீனா கைஃப்

எழுதியவர் Vasuki
Oct 28, 2026
04:55 pm

செய்தி முன்னோட்டம்

குழந்தை பிறப்பிற்கு பிறகு தனது உடல் எடை அதிகரித்ததை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் முன்வைத்த கடுமையான உருவக்கேலிகளுக்கு, பிரபல பாலிவுட் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் முதல்முறையாக மனம் திறந்து பதிலடி கொடுத்துள்ளார். அம்பானி குடும்பத்தினரின் விநாயகர் சதுர்த்தி விழாவில் தனது கணவர் விக்கி கௌஷலுடன் கத்ரீனா கைஃப் பங்கேற்றபோது, அவரது உடல் தோற்றம் குறித்து இணையத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் பகிரப்பட்டன. பல மாதங்களாக நிலவி வந்த இந்த விமர்சனங்களுக்கு வோக் இந்தியா இதழுக்கு அளித்த நேர்காணல் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விமர்சகர்களுக்குத் தெளிவான பதில்

விமர்சகர்களுக்குத் தெளிவான பதில்

பிரசவத்திற்குப் பிறகான உடலமைப்பு மாற்றம் குறித்துப் பேசிய கத்ரீனா கைஃப், "குழந்தை பெற்றெடுத்த பிறகு ஒரு பெண்ணின் உடல் என்னென்ன உடல்ரீதியான மாற்றங்களைச் சந்திக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதைப் பற்றிய பல விழிப்புணர்வுத் தகவல்கள் பொதுவெளியில் கொட்டிக் கிடக்கின்றன".

"அப்படியிருந்தும் ஒரு பெண்ணின் உடலை கடுமையான கண்ணோட்டத்துடனும் இழிவாகவும் பார்க்கிறார்கள் என்றால், அது அறியாமையினால் அல்ல; அவர்களுடைய சொந்த வக்கிரமான தேர்வுதான்".

"கருத்துகள் மாறிக் கொண்டே இருக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம்; இத்தகைய எதிர்மறைப் பேச்சுகளைக் கண்டு நான் நிலைகுலைந்து போக மாட்டேன்" என்று தெரிவித்தார்.

மகனின் வரவு

உடற்பயிற்சி பயணம்

தனது உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்த தெளிவு எப்போதும் உண்டு எனக் குறிப்பிட்ட கத்ரீனா கைஃப், "எனது சொந்த வேகத்திலேயே முழு ஆற்றல் நிலையை மீண்டும் எட்டுவேன்; பழைய நிலைக்குத் திரும்ப அவசரமில்லை".

"4 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பின் மகன் விஹானின் முகத்தைப் பார்த்த தருணத்தை விவரிக்க முடியாது".

"இந்த அழகான தருணங்களை அனுபவிப்பதிலும் அடுத்தகட்ட இலக்குகளிலும்தான் கவனம் உள்ளது" என்றார்.

கடந்த 2021-ல் விக்கி கௌஷலை திருமணம் செய்த கத்ரீனா, 2025 நவம்பர் 7 அன்று விஹான் என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ADVERTISEMENT