
ஜோஷுவா படத்தின் ப்ரோமோவிற்காக ஜெயம் ரவியுடன் இணைந்த வருண்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண் நடித்துள்ள திரைப்படம், 'ஜோஷுவா இமைபோல் காக்க'.
வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வரும் மார்ச் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வருண் உடன் நட்புக்காக ஜெயம் ரவியும் இணைந்துள்ளார்.
எல்லா ப்ரோமோ வீடியோக்களை போலவே இதுவும் கலகலப்பான வீடியோவாக அமைந்துள்ளது. ஜோஷுவா திரைப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வென்ற நடிகர் ஆரவ்வின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு இசையமைத்துள்ளது, பாடகர் கார்த்திக். முன்னதாக, கௌதம் வாசுதேவ் மேனன், துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட முயன்றும் தடைபட்டு வருகிறது.
அதனால், ஜோஷுவா படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஜெயம் ரவியுடன் இணைந்த வருண்
Varun's scam for #Joshua Promotions with JayamRavi👌😂pic.twitter.com/igTxbXdQW8
— AmuthaBharathi (@CinemaWithAB) February 22, 2024