
'துருவ நட்சத்திம்' இல்லை: இம்முறை ரிலீஸ் ஆகவிருப்பது 'ஜோஷுவா இமைபோல் காக்க'
செய்தி முன்னோட்டம்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்துள்ள 'ஜோஷுவா இமைபோல் காக்க 'திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, 'ஜோஷுவா இமைபோல் காக்க' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தில் பிக்பாஸ் வருண் ஹீரோவாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நடிகை ராஹே நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வென்ற நடிகர் ஆரவ்வின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு இசையமைத்துள்ளது, பாடகர் கார்த்திக்.
படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து உள்ளார்.
முன்னதாக, GVM பல சிக்கல்களை தாண்டி 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட எவ்வளவோ முயன்றும், கடைசி நிமித்தில் படவெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
embed
ஜோஷுவா இமைபோல் காக்க ரிலீஸ்
It's Joshua time and everything else takes a back seat.#Joshua Imai Pol Kaakha, starring @iamactorvarun to release worldwide on March 1st!!#JoshuaFromMarch01 Prod by @VelsFilmIntl @IshariKGanesh @Actor_Krishna @iamRaahei @srkathiir @singer_karthik @editoranthony pic.twitter.com/uEPU11AoEX— Gauthamvasudevmenon (@menongautham) February 16, 2024