Loading...
ஜெயிலர் 2 மாஸ் அப்டேட்! ரஜினிகாந்தின் ஒன் சன் ஒன் மூன் பாடல் வெளியானது

ஜெயிலர் 2 மாஸ் அப்டேட்! ரஜினிகாந்தின் ஒன் சன் ஒன் மூன் பாடல் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2026
07:12 pm

செய்தி முன்னோட்டம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ஒன் சன் ஒன் மூன்' (One Sun One Moon) அதிகாரப்பூர்வமாக வெளியானது. முன்னதாக அனிருத் மற்றும் நெல்சன் கூட்டணியின் வழக்கமான நகைச்சுவையான விளம்பரப் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த மாஸ் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாடல்

சூப்பர் ஸ்டாரைக் கொண்டாடும் மாஸ் பாடல்

"ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரன், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்" என்ற வரிகளை மையமாகக் கொண்டு இந்த 'ஒன் சன் ஒன் மூன்' பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைப்பில், துள்ளல் இசையுடன் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் எம்.எஸ்.கிருஷ்ணா இணைந்து பாடியுள்ளனர்.

ரஜினிகாந்தின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ள வரிகள் இணையத்தில் அதிக அளவிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Embed

ADVERTISEMENT

அக்டோபர் 15

அக்டோபர் 15 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் ஜெயிலர் 2

ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வரும் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான அல்லா போலேலோ பாடலைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள ஒன் சன் ஒன் மூன் பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

ADVERTISEMENT