Page Loader
லியோ மொத்த வசூல் எவ்வளவு?- ஜெயிலர் சாதனையை முறியடித்ததா?

லியோ மொத்த வசூல் எவ்வளவு?- ஜெயிலர் சாதனையை முறியடித்ததா?

எழுதியவர் Srinath r
Dec 20, 2023
12:18 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, அக்டோபர் 18ஆம் தேதியன்று வெளியான லியோ திரைப்படம், உலகளவில் ₹623 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. லியோ திரைப்படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இரண்டாவது முறையாக இணைந்த நிலையில், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வழக்கமாக விஜய் படங்களுக்கு, படம் அறிவிக்கப்பட்டது முதல் படம் வெளியாகும் வரை எழும் அனைத்து சர்ச்சைகளும் இப்படத்தையும் சுற்றின. இருப்பினும் ரசிகர்களின் அபர்வீதமான வரவேற்பால், உலகளவில் பல வசூல் சாதனைகளை படம் நிகழ்த்தியது.

2nd card

ஜெயிலரின் வசூலை முறியடித்த லியோ

லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ₹158 கோடிக்கு மேல் வசூல் செய்து, முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதம் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான, ஜெயிலர் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்விகள் எழுந்தது. ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ₹607 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், லியோ திரைப்படம் அதைவிட ₹16 கோடி அதிகமாக வசூல் செய்து ஜெயிலர் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.