Loading...
ஹோம் தியேட்டர் முதல் டப்பிங் ஸ்டுடியோ வரை: போயஸ் கார்டனில் உள்ள தனுஷின் கனவு இல்லத்தின் சிறப்பம்சங்கள்
தனுஷின் ரூ.150 கோடி மதிப்பிலான போயஸ் கார்டன் பங்களா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோம் தியேட்டர் முதல் டப்பிங் ஸ்டுடியோ வரை: போயஸ் கார்டனில் உள்ள தனுஷின் கனவு இல்லத்தின் சிறப்பம்சங்கள்

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
01:27 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நேற்று (நவம்பர். 20) வெளியான ஓம்: ஆபரேஷன் மோல் (O.M: Operation Mole) திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைக் குவித்து வரும் நடிகர் தனுஷின், சென்னை போயஸ் கார்டன் ஆடம்பர இல்லம் குறித்த சுவாரசிய தகவல்கள் தற்போது இணையத்தில் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளன. தனது பெற்றோருக்காக சுமார் ரூ.150 கோடி மதிப்பில் தனுஷ் கட்டியுள்ள இந்த அடுக்குமாடி பங்களா, நவீன வசதிகளுடன் கூடிய ஒரு கலைக்கூடமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தரைத்தளத்தில் விசாலமான வரவேற்பறை, அமைதியான பூஜை அறை, உள்அலங்காரத் தோட்டம் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான விசாலமான இடமும் அமைக்கப்பட்டுள்ளன.

ஹோம் தியேட்டர்

டப்பிங் ஸ்டுடியோ மற்றும் பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம்

முதல் தளத்தில் பிரம்மாண்ட படுக்கையறைகள், விருந்தினர் அறைகள் மற்றும் அதிநவீன ஹோம் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளதோடு, தனுஷின் வெற்றிப் படங்களான விஐபி மற்றும் அசுரன் ஆகியவற்றின் பிரேம் செய்யப்பட்ட போஸ்டர்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன.

மேல் தளத்தில் தனுஷின் சினிமா பணிகளுக்காகப் பிரத்யேக அலுவலகம், நவீன டப்பிங் ஸ்டுடியோ மற்றும் கதை கேட்பதற்கான தனி அறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வீட்டிற்குள்ளேயே நட்சத்திர விடுதிகளுக்கு இணையான நீச்சல் குளம், தனிப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், மொட்டை மாடித் தோட்டம் மற்றும் 6 முதல் 8 கார்கள் வரை நிறுத்தும் அளவிற்கான விசாலமான பார்க்கிங் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளன.

6 வயது சிறுவனின் கனவு

16 வயது சிறுவனாக கண்ட கனவை நனவாக்கிய தனுஷின் நெகிழ்ச்சி கதை

இந்தப் பிரம்மாண்ட வீட்டிற்குப் பின்னால் தனுஷின் சிறுவயது கனவு ஒன்று ஒளிந்துள்ளது.

முன்னதாக ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், தனது 16-வது வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டைப் பார்ப்பதற்காக நண்பருடன் போயஸ் கார்டனுக்குச் சென்றதை நினைவுகூர்ந்தார்.

அப்போது ஒருபுறம் ரஜினிகாந்த் வீட்டையும், மறுபுறம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டையும் பார்த்த நொடியில், என்றாவது ஒருநாள் இந்தப் பகுதியில் தனக்கென ஒரு வீடு வாங்க வேண்டும் எனத் தீர்மானித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

கடின உழைப்பால் அந்த லட்சியத்தை நனவாக்கிய தனுஷ், இந்தப் போயஸ் கார்டன் இல்லத்தைத் தனது 16 வயது வெங்கடேஷ் பிரபுவிற்குத் தான் அளித்த பரிசாகக் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT