NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தீபாவளிக்கு OTTயில், திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் இவைதான்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீபாவளிக்கு OTTயில், திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் இவைதான்!
    பல திரைப்படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடியிலும் வெளியாகவுள்ளது

    தீபாவளிக்கு OTTயில், திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் இவைதான்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 21, 2024
    07:52 am

    செய்தி முன்னோட்டம்

    வரும் அக்டோபர் 31 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.

    பொதுவாக இது போன்ற விழாக்களின் போது திரைப்படங்களை வெளியிடுவது எழுதப்படாத விதி.

    அந்த வகையில் இந்த ஆண்டும் பல திரைப்படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.

    முதலில் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களை பற்றி பார்க்கலாம்.

    தங்கலான்

    பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது 'தங்கலான்' திரைப்படம். இதில், சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்ற நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். படம் வசூல்ரீதியாக பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. எனினும், இப்படம் தற்போது வரை ஓடிடியில் வெளியாகவில்லை. இப்போது, இது இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. ஆனால், தீபாவளியை முன்னிட்டு 'தங்கலான்' ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    OTT

    OTT வெளியீடுகள்

    மெய்யழகன்: பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமர்சனரீதியாக இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

    லப்பர் பந்து: ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற படம் 'லப்பர் பந்து'. ரஜினியின் 'வேட்டையன்' அலைக்கு மத்தியிலும் தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது 'லப்பர் பந்து'. கடந்த அக்டோபர் 18ஆம் தேதியே ஓடிடியில் ரிலீசாக இருந்த இப்படம் தியேட்டரில் இன்னமும் வெற்றிகரமாக ஓடி வருவதால் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் 'லப்பர் பந்து' படம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தியேட்டர் வெளியீடுகள்

    தீபாவளி தியேட்டர் வெளியீடுகள்

    இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'அமரன்', கவினின் 'ப்ளடி பெக்கர்' மற்றும் ஜெயம் ரவியின் 'பிரதர்' ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

    அத்துடன் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' படமும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அத்துடன் ஹிப் ஹாப் ஆதியின் 'கடைசி உலகப் போர்' மற்றும் சீனு இராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' ஆகிய படங்களும் இந்த வாரம் OTTயில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    ஓடிடி
    திரைப்படம்
    திரையரங்குகள்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    தீபாவளி

    கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில் கோவை
    ரஜினிகாந்தின் 'லால் சலாம்' திரைப்பட டீசர் வெளியானது  ரஜினிகாந்த்
    தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம் பண்டிகை
    சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல் சென்னை

    ஓடிடி

    ரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்! திரைப்பட வெளியீடு
    'கண்ணகி' முதல் 'பைட் கிளப்' வரை- தமிழில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு திரைப்பட வெளியீடு
    நடிகர் மேத்யூ பெர்ரி கெட்டமைன் ஓவர் டோஸ்ஸால் உயிரிழந்தார்- பிரேத பரிசோதனை அறிக்கை அமெரிக்கா
    'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு பிரபாஸ்

    திரைப்படம்

    நடிகர் தனுஷின் டி52 படத்தை தயாரிக்கப்போகும் நிறுவனம் இதுதான்; வெளியானது அறிவிப்பு தனுஷ்
    சைமா விருதுகள் 2024: தமிழில் விருது வென்றவர்களின் முழு பட்டியல் விருது விழா
    D52: மீண்டும் தன்னுடைய படத்தை தானே இயக்கும் தனுஷ்; படத்தின் பெயர் வெளியீடு தனுஷ்
    'தளபதி 69' படத்தில் விஜய்க்கு வில்லனாகிறாரா பிரகாஷ் ராஜ்? விஜய்

    திரையரங்குகள்

    தமிழில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள், சீரிஸுகள் சினிமா
    தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு வெறும் ₹99 சினிமா பார்க்கலாம்- எப்படி தெரியுமா? இந்தியா
    சென்னையில் லியோ திரைப்பட டிக்கெட் முன்பதிவில் தாமதம்  திரைப்பட வெளியீடு
    தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்? இயக்குனர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025