Loading...
ரஜினி கொடுத்த திடீர் ஆதரவு: 2031 தேர்தலில் களம் இறங்கும் தனுஷ்?
ரஜினிகாந்தின் பின்னணி ஆதரவோடு அரசியல் களம் காணும் நடிகர் தனுஷ்

ரஜினி கொடுத்த திடீர் ஆதரவு: 2031 தேர்தலில் களம் இறங்கும் தனுஷ்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2026
10:14 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷும் நேரடி அரசியல் பயணத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்த அரசியல் நகர்வில் நடிகர் ரஜினிகாந்தின் முழுமையான வழிகாட்டுதலும், பின்னணி ஆதரவும் தனுஷுக்கு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த காலத்தில் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டு, பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி விலகிய நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள், தனுஷின் இந்த முயற்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். ரஜினிகாந்த் நேரடியாக தேர்தலில் நிற்காவிட்டாலும், தனது அரசியல் அனுபவம் மற்றும் ரசிகர் பலத்தின் மூலம் தனுஷுக்குப் பக்கபலமாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சி

'தமிழக எழுச்சி கழகம்' கட்சிப் பதிவு செய்தி

தனுஷ் தரப்பில் 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தனுஷ் தரப்பில்,"அரசியல் வருகை உறுதியானது என்றாலும், ரஜினியின் வழிகாட்டுதலின்படி சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்; அதுவரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வரும் உள்ளாட்சி அல்லது மக்களவை தேர்தல்களில் போட்டியிடாமல், விஜய் பாணியிலேயே நேரடியாக 2031 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தனுஷ் காய்களை நகர்த்தி வருகிறார்.

ரஜினியின் ஆலோசனையின்படி மாவட்ட வாரியாக ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தி, மக்கள் நலப்பணிகளை முடுக்கிவிடும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ரஜினிகாந்தின் மறைமுக ஆதரவோடு தனுஷ் மேற்கொள்ளும் இந்த அரசியல் பிரவேசம், தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் சூழலில் மற்றொரு பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

ADVERTISEMENT