LOADING...
'ஜவான்', 'புஷ்பா 2' சாதனைகளை முறியடித்து ஆயிரம் கோடியை நெருங்கும் 'துரந்தர் 2'
வெளியான 6 நாட்களில் உலக அளவில் ₹919 கோடி வசூல் செய்துள்ளது 'துரந்தர் 2'

'ஜவான்', 'புஷ்பா 2' சாதனைகளை முறியடித்து ஆயிரம் கோடியை நெருங்கும் 'துரந்தர் 2'

எழுதியவர் Venkatalakshmi V
Mar 25, 2026
10:17 am

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் இயக்குனர் ஆதித்ய தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர் 2' திரைப்படம், இந்தியத் திரையுலகின் முந்தைய வசூல் சாதனைகளை தவுடுபொடியாக்கி வருகிறது. வெளியான 6 நாட்களில் உலக அளவில் ₹919 கோடி வசூல் செய்து, விரைவில் ₹1000 கோடி மைல்கல்லை எட்டவுள்ளது. கடந்த மார்ச் 19 அன்று வெளியான இந்தப் படம், ஷாருக்கானின் 'ஜவான்' மற்றும் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' ஆகிய படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் (நான்கு நாட்களில்) ₹400 கோடி வசூல் செய்த முதல் ஹிந்திப் படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

வசூல்

துரந்தர் 2 வசூல் விவரங்கள்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் மட்டும் இப்படம், அதன் ஹிந்தி பதிப்பின் வசூலை ₹500 கோடி (Net) தாண்டியுள்ளது. வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுச் சந்தைகளில் கிடைத்த பலத்த வரவேற்பால், 6-வது நாளில் இதன் மொத்த வசூல் ₹919 கோடியை எட்டியுள்ளது. விடுமுறை அல்லாத சாதாரண வேலை நாட்களிலும் இப்படம் ₹230 கோடிக்கும் மேல் வசூலிப்பது வர்த்தக ரீதியாக ஒரு அபூர்வ சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

விவரங்கள்

திரைக்கதை பின்னணி

2025 டிசம்பரில் வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்துள்ள இந்தப் படத்தில், ரன்வீர் சிங் 'ஹம்சா அலி மசாரி / ஜஸ்கிரத் சிங் ரங்கி' என்ற உளவாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக ஊடுருவி, பயங்கரவாத வலைப்பின்னல்களை அவர் எப்படித் தகர்க்கிறார் என்பதே இந்தப் பாகத்தின் விறுவிறுப்பான கதையாகும். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் சாரா அர்ஜுன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். தற்போதைய வேகத்தைப் பார்த்தால், இன்னும் இரண்டு நாட்களில் இப்படம் ₹1000 கோடி வசூலைத் தாண்டிவிடும் எனத் திரைத்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Advertisement