Loading...
கோலாகலமாக நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமண புகைப்படம்
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.

கோலாகலமாக நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமண புகைப்படம்

எழுதியவர் Vasuki
Nov 11, 2026
08:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம், ஐரோப்பிய நாடான கிரீஸில் இன்று உற்றார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இனிதே நிறைவுற்றது. நேற்று (நவம்பர் 10) பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்த வைபவம் நடைபெற்ற நிலையில், இன்று இருவீட்டார் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துகளுடன் மங்கள நாண் பூட்டி இருவரும் தங்களது புதிய இல்லற வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் வரவேற்பு

நேரில் வாழ்த்திய விவிஐபி பிரபலங்கள்

கிரீஸின் கடற்கரை நகரில் நடந்த திருமணத்தில் ரஜினிகாந்த் - லதா தம்பதியர், மு.க.ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் குடும்பத்துடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

விருந்தினர்களுக்குச் சென்னையின் 'அரசுவை அரசு' குழுவின் அறுசுவை சைவ விருந்து பரிமாறப்பட்டது.

திருமணம் முடிந்த நிலையில் மணமக்கள் சென்னை திரும்புகின்றனர். வரும் நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இந்தியத் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்த உள்ளனர்.

ADVERTISEMENT