அஜித்தின் விடாமுயற்சி ஜனவரி 30ஆம் தேதி வெளியாகிறதா?
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் உருவான திரைப்படம் 'விடாமுயற்சி'.
கிட்டத்தட்ட 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் ஆரம்பத்தில் 2025 பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஜனவரி 30ஆம் தேதி விடாமுயற்சி வெளியாகலாம் என பிரபல திரைப்பட விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அப்படி வெளியாகும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Vidaamuyarchi likely to release January 30 th as per trade sources!
— Sreedhar Pillai (@sri50) January 7, 2025
திரைப்பட விவரங்கள்
மகிழ் திருமேனி இயக்கிய ஆக்ஷன் திரைப்படம் 'விடாமுயற்சி'
மகிழ் திருமேனி இயக்கியுள்ள ஆக்ஷன் படமான விடாமுயற்சி, தேதி இறுதி செய்யப்படவில்லை என்றாலும், 2025 பொங்கல் அன்று திரைக்கு வரவிருந்தது.
இருப்பினும், "தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்" காரணமாக, ஜனவரி வெளியீட்டுத் தேதியிலிருந்து ஒத்திவைக்கப்படுகிறது என தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
ஏற்கனவே படத்தின் டீஸர் வைத்து இது ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்பட்டது.
வெளியீடு தள்ளிப்போனதும் அது ரீமேக் உரிமம் குறித்த வதந்திகளை மேலும் தூண்டியது.
இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா, ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத் ரவிச்சந்தர்.