
ஆந்திரா, தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு உதவிய முதல் தமிழ் நடிகர்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி மெல்லமெல்ல சகஜ நிலைக்கு திரும்பிவரும் நிலையில், கடந்த வாரம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக அங்கே பெருவெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சிக்கலான சூழ்நிலையிலிருந்து மக்கள் மீண்டு வர தெலுங்கு நடிகர்கள் பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை அளித்தனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவிலிருந்து முதல் ஆளாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் நடிகர் சிம்பு.
சிம்பு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு நிவாரண உதவி செய்ய, ரூ. 6 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
வெள்ள நிவாரணத்திற்கு உதவிய முதல் தமிழ் நடிகர்
#Simbu extends support for flood relief in Telugu states with a ₹6 lakh donation.
— Gulte (@GulteOfficial) September 10, 2024
First Tamil actor to contribute, @SilambarasanTR_ 👏🏼 pic.twitter.com/wlKtqvM1Ux