LOADING...
தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள் 
தீபாவளியை முன்னிட்டு தமிழில் 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.

தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள் 

எழுதியவர் Srinath r
Nov 08, 2023
05:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை என்றாலும், கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்டரின் படங்கள வெளியாகின்றன. இந்த வருட தீபாவளிக்கு தமிழில் 4 படங்களும், தமிழில் மொழி மாற்றப்பட்ட ஒரு ஹிந்தி, ஒரு ஆங்கில படமும் வெளியாகிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். ஜப்பான்- இயக்குனர் ராஜுமுருகன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில், எழுத்தாளர் பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்தி இப்படத்தில் திருடனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

2nd card

திரையரங்க வெளியீடுகள்-2

ஜிகர்தண்டா டபுள்X- இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து பேய் படம் அல்லாத படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே சூர்யா, ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன், இளவரசு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் டச்சில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் முதல் ஆக்சன், டார்க் காமெடி திரைப்படமாக இது உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 1975களில் ஹீரோவாக துடிக்கும் ஒரு கேங்ஸ்டர் இன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படமும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது.

3rd card

திரையரங்க வெளியீடுகள்- 3

ரெய்டு- தீபாவளி ரேசில் கடைசியாக இணைந்த திரைப்படம் விக்ரம் பிரபுவின் ரெய்டு. அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, தமிழில் இப்படம் மூலம் ஸ்ரீதிவ்யா ரீஎன்ட்ரி தருகிறார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா கதை வசனம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரெய்டு வெளியாகிறது. கிடா- மதுரையில் வளரும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தா மற்றும் ஒரு கிடாய்க்கும் இடையேயான பாசத்தை சொல்கிறது இத்திரைப்படம். ரா. வெங்கட் இயக்கியுள்ள இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. நவம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் கிடா வெளியாகிறது.

4th card

தமிழில் வெளியாகும் டைகர் 3, தி மார்வெல்ஸ்

டைகர் 3- மனீஷ் சர்மா இயக்கத்தில் புகழ்பெற்ற டைகர் சீரிஸின் அடுத்த படமாக டைகர் 3, நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது. சல்மான் கான், கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடிக்க, யாஷ் ராஜ் பிலிம்ஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் வெளியான ஷாருக்கானின் பத்தான், வார் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பின்னர் நடக்கும் கதையை டைகர் 3 காட்டுகிறது. தி மார்வெல்ஸ்- கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மார்வெல் திரைப்படத்தின் அடுத்த பாகமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி அன்று வெளியாகும் இத்திரைப்படம், மார்வெல் ரசிகர்களுக்கு சிறந்த தீபாவளி பரிசாக அமையும்.

5th card

ஓடிடி வெளியீடுகள்

தி ரோடு- தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் ஒரு சம்பவம் படத்தில் தொடர்புடைய நபர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுவது தான் படத்தின் கதை. நடிகை திரிஷா இப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா ஓடிடியில் நவம்பர் 10 ஆம் தேதி அன்று வெளியாகிறது. மேலும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. லியோ திரைப்படத்தின் ஓடிடி தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.